உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சத்தரை சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சத்தரை சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கொண்டஞ்சேரி;தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், உயர்மட்ட பால பணி நடந்து வருவதால், அதனருகே அமைக்கப்பட்டுள்ள மாற்று சாலை சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கொண்டஞ்சேரி கிராமம். இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், மப்பேடு - கொண்டஞ்சேரி இடையே சத்தரை கிராமம் உள்ளது. இங்கு, சத்தரை ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்குவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில், 3.50 கோடி ரூபாயில், 36 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட மாற்று சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மாற்று சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை