உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் பரவிய ஜல்லி கற்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் பரவிய ஜல்லி கற்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பு பகுதியில், மேம்பாலம் ஒன்று உள்ளது. ஆந்திரா நோக்கிய திசையில், மேம்பாலம் துவங்கும் இடத்தில், பக்கவாட்டில் இருந்த மண் மற்றும் ஜல்லி கற்கள், கனமழையின் போது கரைந்து ஓடியது.கரைந்தவை அனைத்தும் அதை ஒட்டியுள்ள இணைப்பு சாலையோர கால்வாயில் வடிந்து சென்றன. தற்போது, தண்ணீர் வடிந்த நிலையில், மண் மற்றும் ஜல்லி கற்கள், அந்த இணைப்பு சாலை முழுதும் பரவிக் கிடக்கிறது.அவ்வழியாக கடந்து செல்லும் வாகனங்களின் டயர்களை அவை பதம் பார்க்கின்றன. இரவில், இருசக்கர வாகன ஓட்டிகள் கற்கள் இருப்பது தெரியாமல், தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.எனவே, பெத்திக்குப்பம் இணைப்பு சாலையில் பரவி கிடக்கும் கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை