உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறுகலான மேல்நல்லாத்துார் நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

குறுகலான மேல்நல்லாத்துார் நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு. இங்கிருந்து, எறையாமங்கலம், நுங்கம்பாக்கம், கம்மவார்பாளையம் வழியாக, மேல்நல்லாத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, மப்பேடு, கீழச்சேரி, பண்ணுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதியினர் சென்று வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வாகனங்களுக்கு வழிவிடும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் குறுகலான நெடுஞ்சாலை அகலப்படுத்த வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட கிராம பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துளளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை