உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டு சாலையோரம் குவிக்கப்படும் கரும்பு கட்டுகளால் வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிப்பட்டு சாலையோரம் குவிக்கப்படும் கரும்பு கட்டுகளால் வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு தாலுகாவில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கரும்பு சாகுபடியில் பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. ஒரு முறை நடவு செய்தால், மூன்று முறை அறுவடை செய்ய முடியும். அறுவடை செய்யப்படும் கரும்பு, சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுவதால், கொள்முதல் எளிதாகிறது. இதனால், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது, கரும்பு அறுவடை சீசன் முழுவீச்சில் துவங்கியுள்ளது. வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பு, வயலில் இருந்து சாலைக்கு கொண்டு வரப்பட்டு, லாரி மற்றும் டிராக்டர்களில் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால், சாலையோரத்தில் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்படுகின்றன. குறுகலான கிராம சாலைகளின் ஓரத்தில் குவித்து வைக்கப்படும் கரும்பு கட்டுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலையோரத்தை தவிர்த்து, விசாலமான பகுதியில் கரும்பு கட்டுகளை இருப்பு வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை