உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வழிமறித்து திரட்டும் நிதி வாகன ஓட்டிகள் அதிருப்தி

வழிமறித்து திரட்டும் நிதி வாகன ஓட்டிகள் அதிருப்தி

ஆர்.கே.பேட்டை:தொண்டு நிறுவன தன்னார்வலர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நிதியுதவி கேட்பதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி கிராமங்களில் பெண்கள் சிலர், சீருடை அணிந்து வீடுகள் மற்றும் கடைகளில் நிதியுதவி திரட்டி வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாகவும், அதற்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கும்படியும் கேட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஆர்.கே.பேட்டை அருகே உள்ள மாநில நெடுஞ்சாலையில், வேகத்தடைகளை ஒட்டிய பகுதியில் நிற்கும் தொண்டு நிறுவனத்தினர், வாகனங்களை வழிமறித்து நிதி திரட்டுவதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த தன்னார்வலர்கள், வேலுார் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கின்றனர். இவர்கள் குறிப்பிடும் தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா, சாலையில் வாகனங்களை வழிமறித்து நிதி திரட்டுவது முறையா என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தன்னார்வலர்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !