உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

நெடுஞ்சாலை பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக சோளிங்கருக்கு, மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக சோளிங்கரில் இருந்து பள்ளிப்பட்டு, ஆந்திர மாநிலம், நகரி, புத்துார், திருப்பதிக்கு தினசரி நுாற்றுக்கணக்கான வாகன்ஙகள் பயணிக்கின்றன. இந்நிலையில், இந்த மார்க்கத்தில் தொட்டி கண்டிகை அருகே சாலையின் குறுக்கே உள்ள சிறு பாலம், சமீபத்தில் சேதம் அடைந்தது. மண்ணரிப்பு காரணமாக, பாலம் சிதைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து நேரிடும் அபாய நிலை உள்ளது. எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று இந்த பகுதியில் கடக்கும் போது பள்ளத்தில் சிக்கி கவிழும் நிலை ஏற்படலாம்.இந்த பாலத்திற்கு தடுப்பு சுவரும் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பாலத்தை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ