மேலும் செய்திகள்
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
திருவள்ளூர், 'திருவள்ளூரில் நடப்பு ஆண்டிற்கான கடைகளின் உரிமத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்' என, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் நகராட்சியில் மளிகை, ஜவுளி, ஹோட்டல், துரித உணவகம் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நகராட்சியின் உரிமம் பெற்று இயங்க வேண்டும்.மேலும், ஆண்டுதோறும் கடை உரிமத்தை உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். நடப்பாண்டில் பெரும்பாலான கடைகள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் உள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு கூறியதாவது:திருவள்ளூரில் இதுவரை கடைகளின் உரிமத்தை புதுப்பிக்காதோர், உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.புதிதாக கடைகள் வைத்துள்ளோர், https:tnurban pay.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், ஆதார், பான் கார்டு, ஜி.எஸ்.டி., எண், கடை வரிவிதிப்பு எண் உள்ளிட்ட விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.நகராட்சி அலுவலர்கள் கடையை ஆய்வு செய்து, உரிமம் வழங்குவர். இதுவரை கடை உரிமம் புதுப்பிக்காதோர் மற்றும் அனுமதி பெறாதவர்கள், உடனடியாக உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
08-Nov-2024