உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளிகள் கைது

போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளிகள் கைது

ஆவடி, செப். 29-கொலை வழக்கில், தலைமறைவாக இருந்து நான்கு ஆண்டுகள் போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 48; கொத்தனார். இவர், கடந்த 2020ம் ஆண்டு ஆவடி அடுத்த வெள்ளானுார், பார்கவி தெருவில் கட்டட பணியில் ஈடுபட்டு இருந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பாஷா, மோகன், வெங்கட்ராமன், பாபு ஆகியோர் அவருடன் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 செப்., 6ம் தேதி இரவு பணி முடிந்து, பாஷா, மோகன், வெங்கட்ராமன், பாபு ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது சம்பள பிரச்னை தொடர்பாக, ஐந்து பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாஷா, மாரிமுத்துவை கல்லால் அடித்து கொலை செய்தார். இது குறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், மோகன், வெங்கட்ராமன், பாபு ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான பாஷா, தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இதன் வழக்கு விசாரணை, அம்பத்துார் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த வெங்கட்ராமன், 75 மற்றும் மோகன், 33 ஆகியோர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை