உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை

எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை

சென்னை: தமிழகம் முழுதும், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ஜரூராக நடந்தது. அந்த வரிசையில், ஆடு - கோழி இறைச்சி விற்பனையும் களைகட்டியது. இதற்கிடையில், திருவொற்றியூர் சில இடங்களில், ஆட்டிறைச்சி விலை அதிகரித்து, கிலோ 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு மண்ணீரல் வழக்கமாக, 150 - 170 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தவிர, முதல் தரம் கோழி இறைச்சி, 260 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டாலும், அமாவசை தினம் என்பதால், நேற்றே இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், தாழங்குப்பம், விம்கோ நகர், காலடிப்பேட்டை மீன் சந்தைகளிலும், வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகளவில் மக்கள் கூடி, மீன்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ