மூதாட்டி மரணத்தில் மர்மம்: சகோதரி போலீசில் புகார்
ஊத்துக்கோட்டை: மூதாட்டி மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊத்துக்கோட்டை அடுத்த பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பிரேமா, 62. இவர், கடந்த 11ம் தேதி இறந்து விட்டார். பின், அங்கிருந்த சுடுகாட்டில் இறுதி சடங்கு நடந்தது. பழவேற்காடு அருகே அரசூர் பகுதியில் வசிக்கும் பிரேமாவின் தங்கை விஜயா, சகோதரி சாவி ல் மர்மம் இருப்பதாகவும், அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.