உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகரி - திண்டிவனம் ரயில்பாதை பாலம் விரிவாக்க பணி விறுவிறு

நகரி - திண்டிவனம் ரயில்பாதை பாலம் விரிவாக்க பணி விறுவிறு

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வழியாக திண்டிவனம் வரை புதிய ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2008 ல் துவங்கியது. இதற்காக, ஆர்.கே.பேட்டை ஏரி மற்றும் பள்ளிப்பட்டு அடுத்த லவா ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டன. 2008ல் இந்த பாலங்கள் ஒரு வழி பாதைக்காக கட்டப்பட்டன. தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இரட்டை ரயில்பாதை அமைக்கும் விதமாக பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து லவா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும், இரட்டை வழித்தடத்திற்கு ஏற்ப தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு பகுதியில் தச்சூர் - சித்துார் ஆறுவழி சாலை பணிகளும், நகரி - திண்டிவனம் ரயில்பாதை பணிகளும் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு விரைவில் போக்குவரத்து வசதி மேம்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை