உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிப்படை வசதிகளற்ற நயப்பாக்கம் அரசு பள்ளி

அடிப்படை வசதிகளற்ற நயப்பாக்கம் அரசு பள்ளி

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், அரியத்துார் ஊராட்சி, நயப்பாக்கம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்வது,இங்குள்ள குழந்தைகள் ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்க, அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.சமீபத்தில், இப்பள்ளிக்கு 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டப்பட்டு உள்ளது. ஆனால், குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்படுகின்றனர்.எனவே, ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் நலன் கருதி, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி