உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீத்தஞ்சேரி அரசு பள்ளியில் நீட் பயிற்சி மையம் துவக்கம்

சீத்தஞ்சேரி அரசு பள்ளியில் நீட் பயிற்சி மையம் துவக்கம்

ஊத்துக்கோட்டை:'நீட்' தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுதும், 50 வளர்ச்சி பெறும் வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், பூண்டி ஒன்றியமும் ஒன்று. இதில், போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, பென்னலுார்பேட்டை, மெய்யூர், பூண்டி ஆகிய ஐந்து இடங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில், சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியை மையமாக கொண்டு, 'நீட்' பயிற்சி மையம் துவக்கப்பட்டது. இதில், மேற்கண்ட அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ - மாணவியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பயிற்சி நடைபெறும்.இந்த மையத்தை, பொன்னேரி கோட்டாட்சியர் வாகேசங்கீத்பல்வந்த் துவக்கி வைத்தார். இதில், ஒருங்கிணைந்த பள்ளிகள் உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், பஞ்சாயத்து அலுவலக புள்ளியியல் அலுவலர் யுவராஜ் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி