உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம்

நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம்

திருவள்ளூர்,:திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில் 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகராக திகழும் திருவள்ளூரில் சாலை, கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.பல்வேறு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவற்றை நிர்வகிக்கும் கமிஷனர் பணியிடம், மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. தற்போது, திருவேற்காடு கமிஷனர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.இந்நிலையில், காலியாக இருந்த பணிக்கு, திருவாரூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ