மேலும் செய்திகள்
மெட்ரோ நிலையங்களில் பாலுாட்ட தனி வசதி
20-Jan-2025
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், விடியங்காடு கிராமத்தில், 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், நெசவு மற்றும் விவசாய தொழிலில் பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட மலைப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. சித்தூர் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியில் இருந்து, விடியங்காடு கிராமத்திற்கு சிறப்பான நீர்வரத்து உள்ளது.நீர்வளத்தின் அடையாளமாக விடியங்காடு கிராமத்தில் இன்றளவும் பழமையான தோப்பு ஊருக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கிராமத்தில் தெருக்களுக்கு நடுவே பாயும் நீர்வரத்து கால்வாய் வாயிலாக, விடியங்காடு மற்றும் தேவலாம்பாரம் கிராமங்களுக்கு சிறப்பான நீர் வசதி கிடைத்து வருகிறது.விடியங்காடு கிராமத்தில் தெருக்களுக்கு இடையே பாயும் நீர்வரத்து கால்வாயால் பகுதியினர் மழைக்காலத்தில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, தற்போது, தெருவின் குறுக்கே சிறுபாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் சிறுபால பணிகள் முடிவடைந்து மழைநீர் செல்ல வழி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
20-Jan-2025