கூட்டு குடிநீர் திட்டத்தில் தொட்டிகள் சீரமைப்பு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை சாமந்தவாடா வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, குழாய் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களுக்கு இடையே, ஆங்காங்கே தரைமட்டத்தில் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. திறந்தநிலையில் எந்தவித பாதுகாப்பு தடுப்பும், எச்சரிக்கை பலகையும் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இந்த தொட்டிகளுக்கு கான்கிரீட் சிலாப் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.