மேலும் செய்திகள்
பள்ளத்தில் நிழற்கூரை; சீரமைக்க வலியுறுத்தல்
19-Dec-2024
திருவள்ளூர், புதுார் பேருந்து நிறுத்த நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டுள்ளதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், புல்லரம்பாக்கம் அடுத்துள்ளது புதுார். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில், பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அருகிலேயே, சென்னை குடிநீர் வாரியத்தின் மோட்டார் அறை கட்டப்பட்டு உள்ளது.இந்த நிழற்குடையை ஆக்கிரமித்து, காய்கறி கடை அமைக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர் ஆக்கிரமிப்பினால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயில், மழைக்கு நிற்க இடமின்றி தவிக்கின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் பேருந்து நிறுத்தத்தினை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடையை அகற்ற வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
19-Dec-2024