உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

ஊத்துக்கோட்டை, போக்குவரத்திற்கு இடையூறாக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடி கம்பங்களை வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஊத்துக்கோட்டை வட்டத்தில் தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது வரை கட்சி கொடி கம்பங்களை அகற்றாமல் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கட்சி கொடி கம்பங்கள் அகற்றவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை வட்டத்தில், சாலைகளில் நடப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ