உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குக்கர் வெடித்து மூதாட்டி காயம்

குக்கர் வெடித்து மூதாட்டி காயம்

திருத்தணி:திருத்தணி தாலுகா, சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி தர்மவேணி, 60. இவர், நேற்று மதியம் வீட்டில் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது, திடீரென குக்கரின் மேல்மூடி வெடித்ததில், தர்மவேணியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ