மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல் தம்பதி சிக்கினர்
20-May-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக ஏ.ஆர்.எஸ்., சாலையை ஒட்டியுள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.அப்போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்தர், 40, என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 3 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஜிதேந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
20-May-2025