பைக்குகள் நேருக்குநேர் மோதல் ஒருவர் பலி: இருவர் படுகாயம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் வசித்தவர் மாலிக் பாஷா, 35. இவர், நேற்று முன்தினம் இரவு 'டி.வி.எஸ்., ஜூபீட்டர்' பைக்கில், பொன்னேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருவேங்கடபுரம், பொன்னியம்மன் கோவில் அருகே, இருவர் வந்த 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் திடீரென சாலையின் குறுக்கே வந்தது. இதில், பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.இதில் மூவரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயங்களுடன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலிக் பாஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மற்றொரு பைக்கில் வந்த பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர், 20, தடப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 20, ஆகியோர் பலத்த காயங்களுடன், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.