உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் மோதி ஒருவர் காயம்

கார் மோதி ஒருவர் காயம்

பள்ளிப்பட்டு: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 53. இவர் நேற்று முன்தினம் சோளிங்கருக்கு டி.வி.எஸ். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சகஸ்ரபத்மாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஹோண்டா அமேஸ் கார், மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ