உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜீப் மோதி விபத்து ஒருவர் பலி

ஜீப் மோதி விபத்து ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வடமாநில தொழிலாளி, ஜீப் மோதி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமி மண்டல், 45. கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தங்கி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை அமைந்துள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற 'மஹிந்திரா தார் ஜீப் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ