மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
11-Jan-2025
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, பன்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் ஜோதி, 36; தனியார் தொழிற்சாலை ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. எலக்ட்ரீசியன். இருவரும் நேற்று முன்தினம் இரவு, பன்பாக்கம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.இதில், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி ஜோதி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jan-2025