நிரம்பி வழியும் மேல்நிலை தொட்டி கோவிந்தமேடில் வீணாகும் குடிநீர்
கீழச்சேரி: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள கோவிந்தம்பேடில், 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த குடிநீர் தொட்டி, 2025 - 26ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 35,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி, தினமும் நான்கு - ஐந்து மணி நேரம் குடிநீர் வீணாகி வருவதாக, அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அருகிலேயே ஊராட்சி அலுவலகம் இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.