உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் 4 ஆண்டாக அதிகாரிகள் பாராமுகம்

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் 4 ஆண்டாக அதிகாரிகள் பாராமுகம்

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், வஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசானபூதுார் கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது.குடிநீர் தொட்டியின் கான்கிரீட் துாண்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. தொட்டியின் அடிப்பகுதியும் சேதமடைந்து உள்ளது. இதன் காரணமாக, தேக்கி வைக்கப்படும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது.நான்கு ஆண்டுகளுக்கும் முன் சேதமடைந்தது. தற்போது, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக எவ்வித சீரமப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.குடிநீர் தொட்டி பலவீனம் அடைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் புயல் காற்றின்போது, இடிந்து விழுந்துவிடுமோ என கிராமவாசிகள் அச்சத்துடன் இருக்கின்றனர்.இது தொடர்பாக கிராமவாசிகள் பலமுறை ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ