உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: சாலை மறியல்

நகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: சாலை மறியல்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது சிறுவானுார் ஊராட்சி. இந்த ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இதனால் எங்கள் பகுதிக்கு நுாறு நாள் வேலை பாதிப்பு, குடிநீர், சொத்து வரி அதிகரிப்பு, ஊராட்சிகளுக்கான சலுகைகள் பறிப்பு போன்ற காரணங்களால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து, சிறுவானுார் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசவன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பக டி.எஸ்.பி., ஸ்ரீதர் தலைமையில், நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு நடத்தினர்.பின், மாவட்ட நிர்வாகத்திடம், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தெரிவியுங்கள் என, போலீசார் கூறியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி