மேலும் செய்திகள்
பள்ளி வகுப்பறை கட்ட ரூ.32 லட்சம் ஒதுக்கீடு
14-Oct-2024
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, கன்னிகாபுரம் ஊராட்சியில், பூந்தமல்லி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 16 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பணிகள் முடிந்தது.இதேபோல், ஆயிலச்சேரி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வாயிலாக, 30.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டப்பட்டது. இரண்டு கட்டடங்களையும் பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.
14-Oct-2024