மேலும் செய்திகள்
திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்
01-Feb-2025
திருத்தணி,திருத்தணி ஒன்றியம், அகூர் கிராம குளக்கரையில், ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிர்வாகம் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.ஆனால், இந்த கட்டடத்திற்கு இதுவரை மின்இணைப்பு பெறுவதற்கு முயற்சி செய்யாமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இந்த கட்டடத்தை வேறு எந்த பயன்பாட்டிற்கும் விடமுடியாமல் பூட்டியே உள்ளன.மேலும், இந்த கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், பகல், இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். மின்இணைப்பு பெற்றிருந்தால் ஏதாவது ஒரு அலுவலக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். ஊராட்சி சேவை மைய கட்டடத்தை சீரமைத்தும், மின்இணைப்பு பெற்றும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊராட்சி சேவை மைய கட்டடம் உள்ள பகுதி, நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி மின்வாரிய துறையினர் மின்இணைப்பு வழங்கவில்லை. தற்போது, இடம் பிரச்னைக்கு ஒருவழியாக தீர்வு காணப்பட்டு, அரசு அலுவலகத்திற்கும் பயன்பாடு என்பதால் மின்வாரிய அதிகாரிகளும் மின்இணைப்பு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். விரைவில் மின் இணைப்பு பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Feb-2025