உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது தடப்பெரும்பாக்கம் மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது தடப்பெரும்பாக்கம் மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியுடன், தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஆகிய ஊராட்சிகளை இணைத்து, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கும் என, அரசின் நடவடிக்கைக்கு கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கிராமசபை புறக்கணிப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு கிராமசபை கூட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.தடப்பெரும்பாக்கம் கிராமத்தினர், தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், 100க்கும் மேற்பட்ட தடப்பெரும்பாக்கம் கிராமத்தினர், மீஞ்சூர் பி.டி.ஓ., குணசேகரனிடம், இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.மனு விபரம்:தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், நுாறு நாள் வேலைத் திட்டத்தை நம்பி, 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும்போது, நுாறு நாள் வேலைத் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால், வாழ்வாதாரம் பாதிக்கும். நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ