உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புங்கம்பேடு - நந்தியம்பாக்கம் சாலையோர பள்ளத்தால் அச்சம்

புங்கம்பேடு - நந்தியம்பாக்கம் சாலையோர பள்ளத்தால் அச்சம்

மீஞ்சூர்:புங்கம்பேடு - நந்தியம்பாக்கம் இடையே, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையோரம் பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் இருந்து நந்தியம்பாக்கம், கொள்ளட்டீ வழியாக செப்பாக்கம் வரை, 3.1 கி.மீ., சாலை, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 1.90 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், புங்கம்பேடு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் வரை, 1 கி.மீ,க்கு கான்கிரீட் சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையின் இருபுறமும் மண் கொட்டாமல் இருப்பதால், அப்பகுதி பள்ளமாக உள்ளது. சாலை மட்டத்தைவிட, பக்கவாட்டு பகுதிகள், ஒரு அடி பள்ளமாக இருக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் சாலையோரம் பயணிக்கும் போது தடுமாற்றம் அடைகின்றனர். வாகனங்கள் சாலையை விட்டு கீழே இறங்கும் நிலையில், மீண்டும் கான்கிரீட் சாலைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகம் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையோரம் மண் கொட்டி, சமன்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை