உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேரம்பாக்கத்தில் பரிவேட்டை திருவிழா

பேரம்பாக்கத்தில் பரிவேட்டை திருவிழா

பேரம்பாக்கம்:கம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, கூவம் ஆற்றுங்கரையோரம் பரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பரிவேட்டை திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில் பேரம்பாக்கத்தில் இருந்து பாலமுருகன், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து முருகன் ஆகிய உற்சவர்கள் வந்தனர்.தொடர்ந்து சிவபுரம் கிராமத்தில் இருந்து விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து நாராயாணி அம்பாள் மாரியம்மன் என மொத்தம், 6 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மைதானத்தில் ஒரே இடத்தில் அருள்பாலித்தனர்.பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்தூர், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். இரவு 9:00 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது.இதையடுத்து அந்தந்த கிராமங்களில் உற்சவர்களின் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை