மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
28-Aug-2024
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தோர், பொதட்டூர்பேட்டையில் இருந்து பேருந்து வாயிலாக திருத்தணிக்கு சென்று வருகின்றனர்.திருத்தணியில் இருந்து ரயிலில் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், பொதட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு வரும் மாணவர்கள், தடம் எண்: 'டி63' மற்றும் 'டி43' என்ற அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகள், பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் பயணிக்க போதுமானதாக இல்லை. கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த, கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தினர், நேற்று திருத்தணி போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Aug-2024