மேலும் செய்திகள்
செங்கையில் கரும்பு நடவு விவசாயிகளுக்கு அழைப்பு
28-May-2025
திருவள்ளூர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயிலாக, 1,527 கரும்பு விவசாயிகளுக்கு, 14.67 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024- - 25ம் ஆண்டு அரவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருந்த கரும்பு விலையில், 14.67 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.நிலுவை தொகையை வழங்க, ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து, நிலுவை கரும்பு கிரைய தொகையை விவசாயிகளுக்கு வழங்க, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழிவகை கடனாக, 14.67 கோடி ரூபாயை, தமிழக அரசு வழங்கியது.இத்தொகை, 1,527 கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு, ஆலை நிர்வாகம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவை தொகை பெறப்பட்டதால், புதிதாக கரும்பு நடவு செய்வதில் பெருவாரியான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-May-2025