உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்,:சிறப்பு பென்ஷன் வழங்கக் கோரி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, மாதம் 6,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதை, தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தினர். அதன்பின், ஓய்வூதியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !