உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி மீஞ்சூர் நிர்வாகம் மெத்தனம்

குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி மீஞ்சூர் நிர்வாகம் மெத்தனம்

மீஞ்சூர்: மீஞ்சூர் பேரூராட்சியின் மெத்தனப்போக்கால், அரியன்வாயல் பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில், ஜெகன் நகர், இளங்கோ நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நகர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நான்கு நாட்களாக மேற்கண்ட குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், குடியிருப்பு மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது: நான்கு நாட்களாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. இதுகுறித்து கேட்டால், 'மோட்டார் ஒயர் திருடுபோய்விட்டது. மழை பெய்கிறது' என, காரணம் தெரிவிக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல், விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். அத்தியாவசிய பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி