உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ள நீர் ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்

நந்தியாற்றின் தரைப்பாலத்தில் வெள்ள நீர் ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்

திருத்தணி, திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை, அகூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.,நகர் பகுதியில் செல்லும் நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தரைப்பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடந்து செல்கின்றனர்.இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால் நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் தரைப்பாலத்தின் மேல் இரண்டரை உயரத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.இந்த நிலையில் நேற்று, தரைப்பாலத்தின் மீது வெள்ளம் சென்றுக் கொண்டிருந்த நிலையில், சிலர் வெள்ளத்தில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை