உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாசில்தார் அலுவலகத்தில் மணல் குவியல் வாகனங்கள் நிறுத்துவதில் மக்கள் சிரமம்

தாசில்தார் அலுவலகத்தில் மணல் குவியல் வாகனங்கள் நிறுத்துவதில் மக்கள் சிரமம்

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் காசிநாதபுரம் ஏரி அருகே, திருத்தணி தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் வந்து செல்கின்றனர்.தாசில்தார் அலுவலகத்திற்கு பெரும்பாலானோர் கார், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஓராண்டிற்கு முன் தாசில்தார் அலுவலக வளாகத்தில், மணல் கடத்தல் வாகனங்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த மணலை தாசில்தார் அலுவலகத்தில் கொட்டி வைத்துள்ளனர்.தற்போது, 25 யூனிட் மணல் குவிக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது. இந்த மணல் குவியலால் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் மக்கள் வாகனங்கள் விடுவதற்கு போதிய இடவசதி இல்லை.மேலும், தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சிக்கிய இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மணல் குவியலால், குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் மணலுக்குள் புதைந்து வீணாகி வருகின்றன.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, தாசில்தார் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள மணலை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை