உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பு இல்லாத சுடுகாடு பெரியகடம்பூர் மக்கள் அதிருப்தி

பராமரிப்பு இல்லாத சுடுகாடு பெரியகடம்பூர் மக்கள் அதிருப்தி

திருத்தணி:பெரியகடம்பூர் பகுதியில் உள்ள சமத்துவ சுடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து வீணாகி வருவதாக, அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், பி.சி.என்.கண்டிகை - சின்னகடம்பூர் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரிமேடை, ஆழ்துளை கிணறு ஆகியவை ஏற்ப டுத்தப்பட்டன. ஆனால், சுற்றுச்சுவர் அமைக்காமல் பல ஆண்டுகளாக கா லம் தாழ்த்தி வருகிறது. தற்போது, சுடுகாட்டையும் முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து, ஆழ்துளை கிணறும் பழுதடைந்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது, தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், செடிகள் வளர்ந்துள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவில் உலா வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்து, செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !