சமுதாய கூடம் இல்லாமல் திருப்பந்தியூர் மக்கள் அவதி
திருப்பந்தியூர்:திருப்பந்தியூர் ஊராட்சியில் சமுதாய கூடம் இல்லாததால், பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்தில் திருப்பந்தியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, சமுதாய கூடம் இல்லாததால், பகுதிவாசிகள் அருகில் உள்ள மப்பேடு, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மண்டபத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகளுக்கு பணம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. மேலும், தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சமுதாய கூடம் குறித்து, ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர்.ஆனால், தற்போது வரை ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பந்தியூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.