பெரியபாளையம் பவானியம்மன் தங்க தேரில் பவனி
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர்.இங்கு நடைபெறும் விழாக்களில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, 108 பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் உற்சவர் அம்மன் தங்கத் தேரில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்க ரதத்தில் உற்சவர் பவானியம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.