வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாற்று தடத்திற்கு வாய்ப்பு உண்டு.
பூந்தமல்லி,:உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், மூன்றாவது வார்டில், சேன்ட்ரோ சிட்டியில் வசிப்போர் பங்கேற்று, மனு வழங்கினர்.அதன் விபரம்:பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வழியாக, பரந்துாரில் அமைய உள்ள விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.மெட்ரோ ரயில் வழித்தடம் செம்பரம்பாக்கம், சேன்ட்ரோ சிட்டி குடியிருப்பு நடுவே அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அமைத்தால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.மெட்ரோ ரயில் வழித்தடத்தை மாற்றி, குடியிருப்பு அல்லாத இடங்கள் வழியாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மாற்று தடத்திற்கு வாய்ப்பு உண்டு.