பழவேற்காடு புறவழிச்சாலையில் மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பு
பொன்னேரி, ஜூன் 10-சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுவாயல் பகுதியில் இருந்து, ஏலியம்பேடுல குண்ணம்மஞ்சேரி, பெரியகாவணம், சின்னகாவணம் வழியா பழவேற்காடு சாலை வரை, சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 45 கோடி ரூபாயில், 4.2 கி.மீ. தொலைவிற்கு, மைய தடுப்புகளுடன், 100 அடி அகலத்தில் சாலை அமைகிறது.தற்போது சாலையின் இருபுறமும், மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு உள்ளது.வேம்பு, நாவல், அரசன் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்று கள் வைக்கப்பட்டு உள்ளன. புதுவாயல் துவங்கி, குண்ணம்மஞ்சேரி வரை சாலையின் இருபுறமும் 2,000 மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு தினமும், டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றப்படுகிறது.