உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்று பால சுவரில் வளர்ந்துள்ள செடிகள்

ஆரணி ஆற்று பால சுவரில் வளர்ந்துள்ள செடிகள்

ஊத்துக்கோட்டை:பெரியபாளையத்தில் பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்கின்றனர்.சென்னை இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், பெரியபாளையம் வழியே செல்கின்றன. இச்சாலையில், ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியே தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.கும்மிடிப்பூண்டி மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள இந்த பாலத்தின் சுவரில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பாலத்தின் சுவரில் வளரும் செடியை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி