மேலும் செய்திகள்
'தண்ணி' காட்டிய இயந்திரம் ரூ.10 லட்சம் வீண்
02-Jan-2026
திருவாலங்காடு: திருவாலங்காடில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பயன்பாடின்றி உள்ளது. திருவாலங்காடு ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், கிராமத்தில் சேகரமாகும் குப்பையை தரம்பிரித்து அகற்றப் படுகிறது. மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை, இயந்திரம் மூலம் அரைத்து சாலை பணிக்கு மற்றும் சீருடைகள் தயாரித்து பயன்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவாலங்காடு பாஞ்சாலி நகரில் உள்ள சமுதாய கூட கட்டடத்தில், ஐந்து மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் ஆய்வு செய்து, இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
02-Jan-2026