உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர்

பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர்

பூண்டி, சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ராமஞ்சேரி கிராமம். சுற்றுவட்டார 10 கிராமத்தினர், சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமஞ்சேரி பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பேருந்துக்காக காத்திருப்போருக்காக, பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பயணியர் நிழற்குடையை சூழ்ந்து, மூன்று இடங்களில் சிலர், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இது, பயணியருக்கு இடையூறாக உள்ளதால், அவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ