உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை போலீசார், நேற்று பல்வேறு குழுக்களாக வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுனர்கள், முறையான சீருடை அணிய வேண்டும். லுங்கி, வேட்டி அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டக்கூடாது. இதனால், பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்களில் ஆடை சிக்கும் நிலை ஏற்படும். இதனால் விபத்து நேரிடலாம். இதில், ஓட்டுநர்கள் மற்றும் பயணியர் பாதிக்கப் படலாம். பாதுகாப்பு கருதி, ஓட்டுநர்கள் சீருடை அணிய வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி