உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியரசு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

குடியரசு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திருவள்ளூர்:குடியரசு தினத்தையொட்டி, திருவள்ளூர் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாடு முழுதும் இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளுர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடைமேடை, டிக்கெட் பரிசோதிக்கும் இடம், பயணியரின் உடைமை ஆகியவற்றை எஸ்.ஐ., ஆனந்தன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், நடைமேடைகளில் 'லக்கேஜ்' உடன் வருவோர், மற்றும் பயணியர் கொண்டு வரும் 'டிராவல் பேக்' ஆக்கியவற்றையும், போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளங்களுக்கு இடையிலும் போலீசார் சென்று, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !