உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி பொன்னேரி நகராட்சி பூங்கா

பராமரிப்பின்றி பொன்னேரி நகராட்சி பூங்கா

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட,, 17வது வார்டு, சக்தி நகரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022ல், 92 லட்சம் ரூபாயில், பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பூங்காவில், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை, ஓய்வு எடுக்க இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், மேற்கண்ட பூங்கா சீரமைப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததாலும், தொடர் பராமரிப்பு இல்லாததாலும், அதற்காக செலவிட்ட, 92 லட்சம் ரூபாய் வீணாகி உள்ளது.பூங்கா முழுதும் புற்கள், செடிகள் சூழ்ந்து உள்ளதுடன், இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்தும் இருக்கின்றன. நடைபாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.குடியிருப்புவாசிகள், சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.நகராட்சி நிர்வாகம், பூங்காவை உரிய முறையில் பராமரிக்கவும், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ