உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி

கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி

திருத்தணி, திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கும் மற்றும் விவசாய மின்மோட்டார்களுக்கும், இரண்டு, மின்மாற்றிகள் மூலம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,மேட்டுத் தெரு, நடுத் தெரு மற்றும் பள்ளத் தெரு ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு திடீரென மின்சப்ளை நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று மதியம், 12:00 மணி வரை, அதாவது 17 மணி நேரம் மின்சப்ளை வழங்காததால் இரவு முழுதும் மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றி தெருக் குழாய்களில் குடிநீர் வினிநியோகம் செய்யவில்லை.மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி விவசாயிகள், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்ஒயர்கள் மீது மரக்கிளைகள் விழுவதால் மின்மாற்றியில் பழுது ஆகிறது. நேற்று காலையில் மின்ஒயர்கள் மீது படும் மரக்கிளைகள் அகற்றிய பின் மதியம், மின்சப்ளை வழங்க பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ